திதி:02-02-2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் சிதம்பரநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
“எதையும் தாங்கும் இதயம் எங்கள் ஆசை அப்பா”
“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது அப்பா...
என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
கொண்டு இருக்கும் அன்பு அப்பா..”
துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை அப்பா...
எங்கள் இதயம் உங்கள் பிரிவை
ஏற்கவில்லை அப்பா...
நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?அப்பா...
நீங்கள் எங்கள் சிறந்த குரு தெய்வம் வழிகாட்டி அப்பா...
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உங்களைப் போல் அன்பு கொள்ள
யாரும் இல்லையே அப்பா!
நீங்கள் காட்டிய பாதையில் நாம் பயணித்து
உங்கள் கனவுகளை நனவாக்குவோம்
உங்கள் ஆத்மா அமைதி பெற கண்ணீர்
பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
We’re missed you a lot Arun Anna 🙏