யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் சிதம்பரநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-01-2024
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்!
ஆண்டு மூன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
மூன்று ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!