திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன்
(கவி மாஸ்டர்)
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் - ஆலங்குளம், துணுக்காய்
வயது 85
திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன்
1941 -
2026
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பார்ந்த சசீனா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும்,
உங்கள் தந்தை ஆறுமுகம் ரவீந்திரநாதன் மறைவால் துயருறும் இலங்கையிலும் உலகம் முழுவதிலும் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவருடைய வயதுக்கு அப்பால் இது எமக்கு ஒரு துயரம் நிறைந்த பொழுதாகி விட்டது. இருந்தபோதும் எங்களுக்கு இடையேயான அன்பும், மரியாதையும் இறுதிவரை நிலைத்திருந்தது.
இலங்கையில் அவருடன் பேச சாத்தியமில்லாமல் போய்விட்டாலும் பிரான்சுக்கு வந்த வேளையில் இருந்து பல தடவைகள் பேச சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மனநிறைவடைகிறேன். அவரது மகன் தோழர் செந்திலை நாம் இழந்த வேளையில்தான் அவருடன் பேச முதல்சந்தர்ப்பம் கிடைத்தது.
அவர் மிக நிதானமாகவும், ஒரு ஆசிரியருக்குரிய பண்புடனும், இலங்கையின் உள்நாட்டு போரின் அனுபவங்களை தன்னுள் கொண்டிருந்த உணர்வுடனும் பேசுவார். அவருடைய மகனின் இழப்பு அவருக்கு வேதனையானதாக இருந்தபோதிலும், அதை சற்றும் முகத்தில் காட்டிக்கொள்ளாது மிகவும் பரந்த விடயங்களைப் பற்றிப் பேசுவார்.
தனது மகன் போரை நிறுத்துவதற்காகவும், சமத்துவமான உலகத்திற்காகவும் போராடியதை மிகவும் பெருமையாக நினைவுகூர்வார்.
LSSP ஆல் முதலில் துரோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஒரு தலைமுறையின் வரலாற்றையே பிரதிபலிக்கும் வகையிலான தனது அரசியல் அனுபவங்களை அவர் அவ்வப்போது பகிர்ந்துகொள்வார். UNP, SLFP ஆகியவற்றால் செய்யப்பட்ட தமிழ் மக்கள் மீதான பாரபட்சங்களைப் பற்றி நிறையப் பேசுவார், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரின் தாக்கங்களைப் பற்றி பேசுவார்.
முதுமையான நிலையிலும் தானாகவே தொலைபேசியில் அழைத்து, போர்க் காலத்தில் ஒரு ஆசிரியராக தான் முகங்கொடுத்த பிரச்சனைகளை பற்றி நிறைய பேசுவார். வறிய மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டிய அவசியத்தை விளக்குவார். கல்லியை கிடைக்காமல் செய்வது எப்படி சமுதாயத்தை இருட்டில் தள்ளிவிடும் என விளக்குவார்.
இன்று அந்த பெருமைக்குரிய மனிதர் எம்மோடு இல்லை. ஆனால் அவர் எப்போதும் விரும்பிய, உழைக்கும் வறிய மக்களுக்கு கல்வியை கிடைக்கச் செய்ய நாங்கள் உலகம் முழுவதும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளோடு இணைந்து போராடுவோம்.
உங்கள் எண்ணங்கள் நிஜமாகும்! பெரியவரே அமைதியாக தூங்குங்கள்!
Write Tribute
என் கவித்தாத்தாவுக்கு... கடல் கடந்து வாழ்ந்தீர்கள், என் கண்களால் நான் கண்டதில்லை, ஆனாலும் என் நெஞ்சில் உங்கள் அன்புக்கு எல்லையில்லை! என் 'கவித்தாத்தா' நீங்கள், என் வாழ்வின் வழிகாட்டி, தூர தேசத்தில்...