யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யோகபுரம்(இலங்கை), பரிஸ்(பிரான்ஸ்), தேர்னியே(பிரான்ஸ்), செம்ஸ்போட்(இங்கிலாந்து) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரவீந்திரநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அப்பா என்ற அழகான சொல்லை
அழைக்க இன்று குரல் இல்லை…
ஆனால் எங்கள் ஒவ்வொரு மூச்சிலும்
உங்கள் நினைவு மறையவில்லை…
எங்களைத் தோளில் சுமந்த நாட்களும்,
கையைப் பிடித்து நடந்த பாதைகளும்,
கதைகள் சொல்லி
தூங்க வைத்த இரவுகளும்
இன்றும்
எங்கள் மனதில் வாழ்கின்றன…
எங்கள் வெற்றியில் மகிழ்ந்தவரே,
எங்கள் தோல்வியில் துணை நின்றவரே,
நீங்கள் எங்களுடன் இல்லையென்றாலும்
உங்கள் அன்பு எங்களை விட்டு செல்லவில்லை…
உங்கள் பிள்ளைகளாக பிறந்தது
எங்கள் வாழ்வின் பெருமை அப்பா…
எங்கள் இதயத்தில் என்றும்
உங்கள் நினைவே வாழும்…
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 15-09-2026 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை வீட்டுக்கிரியைகள் 160 Avon Road, Chelmsford CM12LB எனும் முகவரியில் நடைபெறும் பின்னர் பி.ப 01:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Writtle Christian Centre, Pump Lane, Writtle CM1 3DT முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
எங்கள் அப்பாவின் இழப்பை அறிந்தவுடன், நேரில் வருகை தந்த அனைவருக்கும், நேரில் வர இயலாத நிலையில், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும், அஞ்சல் வழியாகவும், மற்றும் மலர்வளையங்கள், பூக்கொத்துகள், இரங்கல் கவிதைகள், அஞ்சலி உரைகள்,காணொளிகள் மூலமாகவும், இணையப் பதிவுகள் ஊடாகவும் தங்களது இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள். உணவு மற்றும் சிற்றுண்டிகள், பானங்கள் வழங்கி தங்களது அன்பையும் ஆறுதலையும் வெளிப்படுத்தி, ஆதரவழித்த உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் வருகை தந்து, இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டு, எங்கள் அப்பாவுக்கு மரியாதை செலுத்திய அன்பு நெஞ்சங்களிற்கும் இறுதிக்கிரியை சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்த ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். இத்துயரமான நேரத்தில் எங்களுடன் பலவழிகளிலும் ஆதரவும் ஆறுதலும் வழங்கிய நண்பர்கள், அயலவர்கள், உறவினர்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை எங்கள் இதய பூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
என் கவித்தாத்தாவுக்கு... கடல் கடந்து வாழ்ந்தீர்கள், என் கண்களால் நான் கண்டதில்லை, ஆனாலும் என் நெஞ்சில் உங்கள் அன்புக்கு எல்லையில்லை! என் 'கவித்தாத்தா' நீங்கள், என் வாழ்வின் வழிகாட்டி, தூர தேசத்தில்...