Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனிவாசகம் வீதி கொட்டடி, பிரித்தானியா லண்டன் Northwood ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 47 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்