Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 JAN 1934
மறைவு 24 JUL 2022
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம்
முன்னாள் யாழ். கல்வித்திணைக்கள லிகிதர், முன்னாள் ஆசிரியர் - ஹட்டன் கைலன்ஸ் மகாவித்தியாலயம், யாழ். செங்குந்தா மகாவித்தியாலயம், முன்னாள் உப அதிபர்- யாழ். கொட்டடி நமசிவாய வித்தியாலயம், முன்னாள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொருளாளர்
வயது 88
அமரர் ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் 1934 - 2022 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனிவாசகம் வீதி கொட்டடி, பிரித்தானியா லண்டன் Northwood ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் பொன்னப்பா குலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  


ஆண்டு மூன்றானாலும் 
ஏன் இந்த நிலைமை எமக்கு
எம்மை அரவணைத்து வழி காட்ட
யாரும் இல்லாமல் தவிக்கின்றோம்!
 எல்லாம் எமக்கு சொல்லித்தந்த நீங்கள்..!
 நீங்கள் இல்லாமல் வாழ்வதற்கு
சொல்லித் தரவில்லையே! வாழ்வு இந்த உலகத்தில்
 நிஜமில்லை கடவுளும் உண்மையில்லை
 என்று உணர்ந்தோம் உம் பிரிவால்!

ஆண்டு மூன்றானாலும் அப்பா - எங்கள்
 அன்புத் தெய்வமே உங்கள்
 முகம் தேடி தந்தையே மூன்று ஆண்டு
 என்ன மூன்று யுகம் கடந்தாலும்
ஏதோவொன்றாய் உங்கள் ஞாபகம் அப்பா..!

ஒரு முறை எம்மிடம் திரும்பி வாருங்கள்
 நீர் வாழ்ந்த இந்த உலகில்
 உமை விட்டு வாழ பிடிக்கவில்லை..!
எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
 எங்களைத் தவிக்க விட்டு
 நெடுந்தூரம் சென்றதேனோ அப்பப்பா!

ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Shanmuganathan Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos