Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 NOV 1943
இறப்பு 17 OCT 2024
அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம்
இலங்கை புகையிரத சேவை திணைக்கள தலைமைப் பணியாளர், ரொறன்ரோ போக்குவரத்து சபை சிரேஷ்ட சேவையாளர்(TTC), வேலணை மத்திய மகா வித்தியாலய மாணவர் மற்றும் சங்க முன்னாள் தலைவர், புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர், காப்பாளர், சிறந்த சமூகத் தொண்டர்
வயது 80
அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம் 1943 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 47 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 26-10-2026

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு
அகலாது நாங்கள் உங்களை
மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா...

உங்கள் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்