Clicky

4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்கள் அருள்மலா குலரத்தினம், அருள்ரத்தினம் குலரத்தினம்
மறைவு - 09 MAY 2022
அமரர்கள் அருள்மலா குலரத்தினம், அருள்ரத்தினம் குலரத்தினம் 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

அமரர் அருள்மலா குலரத்தினம்
தோற்றம்:31-07-1970 மறைவு: 09-05-2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்மலா குலரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.   

உன் குரல் இன்னும் கேட்கிறது
நாங்கள் எல்லோரும் உங்களோடுதான் பேசிகிறோம்
உங்களோடுதான் சிரிக்கின்றோம்
 சண்டை போட்டதும் நினைவாக
சேர்த்து சிரிச்சதும் கனவாக
உம்மோடு இருந்தகாலம் பொன்னானது
நீ இல்லதா காலம் வெறுமையானது
 நீங்கள் எங்களை விட்டுபிரிந்து 4 ஆண்டு ஆயின
ஆசை மகள், தங்கை, அக்கா, சித்தி, மாமி
என்று இருந்த நாம் இப்போ
உம்மை நினைத்து ஏங்குகிறோம் நீ எங்கேயோ,
 இருந்தாலும் எம்மில் எப்போதும் உயிரோடுதான்
 எம் வாழ்க்கை முழுக்க நீயே
 உங்கள் ஆத்ம சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அமரர் அருள்நத்தினம் குலரத்தினம்
தோற்றம்: 22-07-1969 மறைவு: 30-03-2021

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்ரத்தினம் குலரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஐந்தாம் ஆண்டு வந்துவிட்டது,
ஆனால் அந்த நாள் மறையவில்லை…
காலம் நகர்ந்தாலும் கூட,
காயம் மட்டும் ஆறவில்லை…

 சிரிப்பு ஒலி மங்கிவிட்டது,
நினைவுகள் மட்டும் நிறைந்திருக்கிறது…
இல்லை என்ற உண்மை தெரிந்தும்,
இன்னும் உள்ளம் ஏற்கவில்லை…

 நேற்று போல தோன்றும் நாட்கள்,
இன்று நினைவாக மாறிவிட்டது…
உயிரோடு இருந்த தருணங்கள்,
இதயத்தில் என்றும் வாழ்கிறது…

 ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இது,
மௌனமாக சொல்லும் வலி இது…
மறக்க முடியாத நினைவுகள்,
மனதோடு என்றும் பயணம் செய்கிறது…

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 11 May, 2022
நன்றி நவிலல் Wed, 08 Jun, 2022
நினைவஞ்சலி Wed, 08 May, 2024