Clicky

நினைவஞ்சலி
அமரர்கள் அருள்மலா குலரத்தினம், அருள்ரத்தினம் குலரத்தினம்
மறைவு - 09 MAY 2022
அமரர்கள் அருள்மலா குலரத்தினம், அருள்ரத்தினம் குலரத்தினம் 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் அருள்மலா குலரத்தினம்
தோற்றம்: 31-07-1970
மறைவு: 09-05-2022

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்மலா குலரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
இரண்டு ஆனதுவோ நம்ப முடியவில்லை
உம் நினைவால் நாங்கள்
நாளும் தவிக்கின்றோம் அக்கா!

அன்பில் குறைவிலா அறிவில் நிகரில்லா
அழகிய அருள் அக்கா
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்- உன்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
உன் நினைவு அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை அக்கா!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்

---------------------------------------------------------------------

அமரர் அருள்ரத்தினம் குலரத்தினம்

தோற்றம்: 22-07-1969
மறைவு: 30-03-2021 

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்ரத்தினம் குலரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 11 May, 2022
நன்றி நவிலல் Wed, 08 Jun, 2022