யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருள்மலா குலரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
கணிதத் துறையில் வைத்த
காதலினால் பதிப்பித்த புத்தகங்கள் எத்தனை,
கல்வித் தாயிட்க்குச் செய்த சேவைதனை
இடை நடுவே விட்டுச் சென்றது ஏனோ!
நீர் உருவாக்கிய கல்விச் செல்வங்கள்,
உலகெங்கும் ஒளிவீசுகையில்
நீர் எங்கு ஓடி மறைந்தீர்
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
என்றும் சிரித்த முகத்துடன்
எப்பொழுதும் நிதானத்துடன் ஆசை மகளாய்,
ஆருயிர்ச் சகோதாரியாய், அன்பு மனைவியாய்,
உற்ற தோழியாய், கண்டிக்கும் ஆசானாய்,
கௌரவமான மேலதிகாரியாய்
எளிமையே உருவாய்
எம்முடனே
வாழ்ந்து வழிகாட்டினீர்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்திவிட்டு உம் மணவாளனிடம்
சென்றது ஏனோ?
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டீரே
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
“அருள்- அக்கா” உன்னைப்போல் அன்புகொள்ள யாருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாயி! ஓம் சாயி! ஓம் சாயி!
Accept our heartfelt condolences.