Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JUL 1996
இறப்பு 13 JUL 2022
அமரர் அனுஜன் குகனேஸ்வரன்
Senior Investor Relations Analyst
வயது 25
அமரர் அனுஜன் குகனேஸ்வரன் 1996 - 2022 Toronto, Canada Canada
Tribute 35 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், North York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனுஜன் குகனேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 29-06-2026

சிப்பிக்குள் முத்தாய் 
அன்னையின் கருவறையில் 
இப்புவியில் உதித்த அனுயா!
ஆண்டு 4 கடந்த பின்பும் 
ஓயவில்லை உன் நிவைவலைகள்.

உள்ளம் வெந்து துடித்து 
உரக்கக் கத்துகிறோம்… 
உத்தமனெ உன் பிரிவு 
உயிருள்ள வரை உறங்காதய்யா....

மண்ணுலகிற்கு நீ பிறந்தது 
மாபெரும் புண்ணியமாய் 
எண்னிய எம் நெஞ்சமெல்லாம்- 
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணுறாய் போன தென்ன---?

இறப்பு என்பது இயல் பானதென்பர் 
இளமையில் இறப்பு இயல் பாகுமா? 
உன்னழகு வதனம் காணாத
 எம்மனம் ஏங்கி நில விழத்து
 வானம் போல் இருண்டு கிடக்குதடா அனுயா!

கலைந்து செல்லும் மேகமென 
காலங்கள் கடந்து போகின்றனவே
 ஆனாலும் உன் நினைவுகள் 
புயலென எரிமலையென 
கடலனையென எம் மனங்களில்
 பொங்கிப் பிரசாரித்துக் 
கொண்டே இருக்கும் அனுயா !

மகன் என கூப்பிட நீ இல்லை ! 
அண்னா என அழைக்க நீ இல்லை! 
நண்பனுக்காய் ஓடி வர நீ இல்லை
 உறவுகளுக்காய் நிற்க்க நீ இல்லை!

நான் பார்க்கும்திசையெல்லாம் 
உன் உருவமே தெரிகிறது அனுயா! 
நிஜத்தில் வந்து விட்டால் 
நிம்மதியாய் நாம் சிருப்போம் 
வாராது சென்றதனால் தீராத சோகம்மடா!

அன்னை தந்தைக்கு முதல் மகனாய் 
அவதரித்த் எம் அன்பு அனுயா.... 
ஐயகோ! இது என்ன விதியடா
 வையகத்தில் வாழ ஆசைப்பட்ட 
உன்னை காலன் பறித்தானோ!

எம் குலம் விழது விட உதித்திட்ட 
முதல் முத்தடா அனுயா....... 
மொத்தமாக உன்னை வாரிக் கொடுத்து விட்டு
விழியோரம் எந்நாலும் கண்ணீர் சுமக்கின்றோம்

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்,
 மாண்டர் என்றும் மீண்டும் வருவதில்லை
 இருந்தும் அழது துடிக்கின்றோம்...

உன் ஆத்மா சாந்தி அடைய 
ஆண்டவன் காலடியில் பிராத்திக்கின்றோம். 

உன் பிரிவால் வாடும் அம்மா, அப்பா, 
தங்கைகள், அன்பு தம்பி 

தகவல்: அன்பு அப்பா, அம்மா, அன்பு தம்பி, தங்கைகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 15 Jul, 2022
நன்றி நவிலல் Fri, 12 Aug, 2022