
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், North York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனுஜன் குகனேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-07-2025
எங்கள் உயிருக்கும் உயிரான அனுயா...
என் உலகம் நீ தான் என்றிருந்தோம்
அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
சிறுவதில் விட்டு எங்கு சென்றாயோ..?
மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில்
காத்திருந்து
படைத்தவன் பழி தீர்த்தானோ?
உணர்வுடன் ஒன்றாகிப்போன எம் உயிரே!
ஈன்றவள் காத்திருக்கிறாள்
என்றாவது ஒரு நாள் வந்துவிடமாட்டாயா என்று
உடன்பிறப்புகள் தவிக்கின்றன
மறுபடியும் உதிரத்தால் ஒன்றுபட மாட்டாயா என்று
கண்ணே தலை மகனே!
எண்ணிலடங்கா கனவுகளுடன் நானும்
உன் வாலிபத்தின் வாழ்வுதனை- எண்ணி
வளர்பிறையாய் இருந்தோமடா அனுயா
எல்லோர் மனங்களிலும் அன்பாக அகம் மலரச்
செய்தாயே
பூமிக்கு வந்த வேளை முடிந்ததென்று-நீ
சிறுவதில் உன் பயணத்தை முடித்து விட்டாயோ
மகனே!
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் பிரிவால்
சிரித்த உன் அழகு முகமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கிறது எங்கள் உள்ளங்களில்
அழியாத ஓவியமாக
எம் வாழ்வின் உதயமே நாம்
தேடி எடுத்த பொக்கிஷமே
காலன் கண் வைத்தானோ
உன்னை அழைத்து செல்வதற்கு...!!!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் எமக்கு நீ
மட்டுமே பிள்ளையாய் பிறந்திடுவாய் என்று
ஏங்கி நிற்க்கும் உன் தாய்....!!!
உன் ஆத்மா சாந்திக்காக இறைவனை தினமும்
வேண்டுகிறோம்.
அன்புடன் அம்மா, அப்பா, அன்புத் தம்பி, தங்கைகள்
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.You see youtube help RJ tamzla or JT wiew SK kirsna any help