கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், North York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனுஜன் குகனேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-07-2023
அனுயன் நீ எங்களை விட்டு போய்
ஓராண்டு முடிந்தாலும் அது எமக்கு
ஒரு நிமிடம் போல் இருக்குதடா.!
எங்கள் வாழ்வில் நீ சூரியனை போல்
ஒளியை தந்து வாழத்தொடங்கிய வயதில்
எங்கள் எல்லாரையும் விட்டு விண்ணுலகம்
சென்றதன் காரணம் எமக்கு
இன்னும் தெரியவில்லையடா...!
அழகான நேரத்தையும் அழியாத
சோகத்தையும் எமது வாழ்வில்
நீ தான் தந்தாய்...!
உன் அழகான சிரிப்பும், ஆறு அடி உயரமும்,
வடிவான கண்ணழகும், முத்துப் பல்லழகும்
எங்கள் கண் முன்னே எப்பொழுதும்
நிலையாக நிற்குதடா...!
அன்புடன் அம்மா என்று அழைப்பவனே
உன் குரல் கேட்காமல் நடை பிணமாய்
திரிகிறோம்...!
கல்வியிலும், விளையாட்டிலும், வேலையிலும்
நீ மலைபோல் உயர்ந்தபோது காலன்
உன்னை நாடியது ஏனோ...!
உன் ஆத்மா சாந்தியடைய கடவுளை
பிராத்திக்கிறோம்...!
ஓம் சாந்தி.! ஓம் சாந்தி.! ஓம் சாந்தி.!
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.You see youtube help RJ tamzla or JT wiew SK kirsna any help