கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், North York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனுஜன் குகனேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-07-2024
எங்கள் ஆருயிர் மகனே நீ எங்கு சென்றாய்
பண்பும் பாசமுக் பணிவும் கொண்ட
எங்கள் அன்பு அனுயா!
எங்கள் அன்பில் வந்த முதல் செல்வம்மடா நீ
இன்று எங்களை தவிர்க்க விட்டு
நீண்ட தூரம் சென்றுவிட்டாய்
எங்கள் மனம் ஏற்றுக் கொள்ள
முடியாமல் தவிக்கின்றோம் அனுயா!
உன் மணக்கோலம் காண துடித்தோம்
நீயோ பூக்கோலம் கொண்டு
மறைந்த மாயம் என்னவோ
திரும்பிய பக்கமெல்லாம் உன் திருவுருவம்
கண்ணுக்குள் நிறைக்குதய்யா
செல்லக் கோபம் கொள்ளும்
உன் அழகெல்லாம் சொல்லாமல் போனதய்யா!
கதறியழுதாலும் உன்னைப் போலொரு
செல்வன் இந்த உலகம் காணாதய்யா
நீ மீண்டும் உதிர்த்து வருவாயென
உன் உடன் பிறப்புகள் ஏங்குகின்றார்கள்!
தேடியும் கிடைக்காத செல்வமடா அனுயா
என் செய்வோம் என் செல்லமே தேடுகின்றோம்
என் பிள்ளை போன திசை எது என்று தெரியாது?
இளமையில் எமைப் பிரிந்தாய்
இதயத்தில் நிறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எல்லோர் மனதையும் அன்பால் வென்ற உன்னால்
அந்த காலனை மட்டும் ஏன் வெல்ல
முடியாமல் போயிற்று
கடைசிவரை எங்களுக்கு துணையிருப்பேன் என்றாயே
எங்கள் எல்லோரையும் தவிர்ப்பில்
ஆழ்த்திவிட்டு சென்று விட்டாயே!
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறார்கள்!
நீ மீண்டும் உதிர்த்து வருவாயென
அனுயா Please டா உதிர்த்து வாடா!
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!!
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.You see youtube help RJ tamzla or JT wiew SK kirsna any help