யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜேசுராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
ஆண்டு 7 சென்றனவோ?
எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது
ஏன் என்றால் எம்மோடுதான் வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம் வாடுகிறோம் அப்பா
மனைவி மனதுக்குள் அழுகின்றோம் ஐயா
எங்கே எமது அன்பு அப்பப்பா, அம்மப்பா
என ஏங்கித் தேடும் பேரப்பிள்ளைகள்
அப்பப்பா தூக்கவும் இல்லை
கட்டி அனைத்து முத்தம் இடவுமில்லை
அரவணைத்து அன்பைப் பொழியவும் இல்லை
அவர் திருமுகத்தை நாம் காணவும் இல்லை
இனி எப்போது உங்கள் திருவுருவத்தை காண்போம்!
இயற்கையோடு நீங்கள் கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே வாழ்ந்து
உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.