யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜேசுராசா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
ஆண்டு ஆறு ஆனதுவோ
உங்கள் முகம்
கண்டு ஏற்க முடியவில்லை
உங்கள் இழப்பை
எம் கண்களில்
ஈரம் நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை !
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க
சுவாசம் இல்லை நேசிக்க
யாரும்
இல்லை நெஞ்சம் எல்லாம்....
வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதையா!
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள் உமை
காண வரம் கொடுக்கலையே...........!
ஆண்டு ஆறு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல் எம்மை
காத்த
அன்புத்தெய்வமே
ஆறிடுமோ
எங்கள் துயரம் நீங்கள்
பிரிந்து ஆறு வருடம்
ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது
உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்.........!!!!!
எம் உயிரான உமக்கு
மலர்ச்சாந்தியாக
செலுத்துகின்றோம்.....
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.