2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்ரன் ஜேசுராசா
வயது 65
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜேசுராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை வாட்டுகின்றது அப்பா
கண்ணை மூடி நான் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உன் முகத்தை
நான் யாரிடமும் இன்னும் அறியலையே.....
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா...
எம் இதயம் கலங்குதையா
ஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஓராயிரம் ஆண்டுகள் வந்தாலும்..
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காதையா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.