Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 12 SEP 1959
இறப்பு 02 JAN 2020
அமரர் ஆனந்தன் காசிப்பிள்ளை
வயது 60
அமரர் ஆனந்தன் காசிப்பிள்ளை 1959 - 2020 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg(Saar) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்ப தெய்வமே!
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு,
நாட்கள் 31 ஆனாலும் உங்கள் நினைவுகள் என்றும்!
எங்கள் நெஞ்சை விட்டகலாது.

மனசு வதைக்கின்றதே தெய்வமே!
மரணம் உங்களை தொட்ட நாளிலிருந்து
ஏது செய்வோம் எம் செல்லமே!
எதுவும் இல்லை எம் கையிலே....

காயங்கள் நாட்பட ஆறிப்போகும்
கற்பனைகள் ஒரு பொழுதில் மாறிப்போகும்
கனவுகள் எப்பொழுதும் கலைந்து போகும்
ஆனாலும் அழியாது உங்கள் நினைவும் உங்கள் சுவடும்

முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உங்கள் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய் கலந்துவிட்ட எங்கள் தெய்வமே!

உங்கள் ஆத்ம சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!!!

எங்கள் தெய்வத்தின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்து ஆற்றுதலும், தேற்றுதலும் கூறிய அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலமாகவும், அனைத்து சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் துயரத்தை பகிர்ந்து கொண்டு அனுதாபங்களை தெரிவித்து ஆறுதல் கூறியவர்களுக்கும், பல இடையூர்களின் மத்தியிலும் தூரதேசங்களில் இருந்து நேரில் வருகை தந்து அனுதாபம் தெரிவித்த நல்லுள்ளங்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள், பிரசுரங்கள், மலர்வளையங்கள், பூங்கொத்துகள் வைத்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கி, இறுதி வணக்கம் செலுத்திய அனைவருக்கும் மேலும் இன்று வரை எம்முடன் கைகோர்த்து சகல உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் நல்கிய அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.