யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உங்களைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ? எங்கள் தந்தையே
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் தந்தையே!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
ஓராண்டு ஓடி மறைந்தாலும் - உங்கள்
நினைவுகள் என்றென்றும் மறந்திடுமோ
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே
நிழலாகும் உங்கள் நினைவுகள் நித்தமும்
எம்முடன் உயிர் வாழும்
அப்பா..!
ஆண்டு ஒன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவலைகள் எங்களுடன் வாழும் அப்பா!
உங்கள் வார்த்தைகள் எங்களை வழிநடத்த
நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நினைவோடு
நீதிநெறி தவறாமல் எங்களின் காவல்
தெய்வமாக நீங்கள் வழிநடத்த உறுதியாக
வாழ்ந்து கொண்டே இருப்போம் அப்பா...
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
Please accept our heartfelt condolences. May his soul rest in peace!