

-
12 SEP 1959 - 02 JAN 2020 (60 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Homburg, Germany
யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை நிரந்தரமாய்
பிரிந்து சென்று உங்கள் நினைவுகள்
எங்கள் கண்முன்னே நிழலாடுகிறது!
உங்கள் அன்பும் அரவணைப்பும்
கண்டிப்பான பேச்சும் மீண்டும்
வேண்டும் என உங்களைத்
தேடுகின்றோம் அப்பா! சிரித்த
முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
உங்கள் அன்புமுகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்தகாலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
அன்புள்ள எங்கள் அப்பாவே!
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனியார் தருவார்
என்றும் உங்கள் நினைவுகள்
சுமந்து உங்கள் வழியில்
உங்கள் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Homburg, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Please accept our heartfelt condolences. May his soul rest in peace!