யாழ். புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தன் காசிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிரிவு என்ற வலியை சுமந்து கொண்டு
ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை
பார்க்காமல் ஏன் பிரிந்தீர்கள் அப்பா?
கண்ணை இமை காப்பது போல்- எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே!
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே!
நீங்கள் வகுத்துத்தந்த பாதையிலே
நாங்கள் வாழ்கின்றோம். ஆகையால்
எங்களுக்கு நீங்கள் இல்லை என்ற குறையைத்
தவிர எக்குறையும் இல்லை அப்பா!
அடுத்தொரு பிறப்புண்டானால் அப்பொழுது
மட்டுமல்ல- ஏழேழு பிறப்பிலும் எமக்கே
அப்பாவாய் பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த நினைவுகளும்
வார்த்தைகளும், காற்றோடும் மூச்சோடும்
எந்நாளும் கலந்திருக்கும் அப்பா!
ஐந்து வருடங்கள் கடந்தால் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை எங்களால்
மறக்கமுடியாது அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Please accept our heartfelt condolences. May his soul rest in peace!