திதி: 17-11-2025
யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வதிவிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் தவபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று ஆகியும்
ஆறவில்லை எம் துயரம்
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே
நினைக்காமல் போனதென்ன
நிஜம்தானா என்று நினைக்கின்றோம்
தினமும் திக்கற்று தவிக்கின்றோம்
திரும்பி வரமாட்டிரே எங்கள் இதயதுடிப்பில்
அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல்
உணர்கின்றோம்....
அன்பிற்கு இலக்கணமாக இருந்த
எங்கள் அம்மாவே ஆயிரம் உறவுகள்
அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு
காட்ட யாரும் இல்லையம்மா...
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்...
Unkalathma iraivan adiuil ??? Umathu anbu nanbi Pushpa France