

அன்பே உருவாய் அணைப்பின் இலக்கணமாய் இன்பே வாழ்வாய் இயைந்து இன்புற்ற பெருமகனே மன்பதை வாழ்ந்திட வழிகள் கண்டிட அல்லும்பகலும் மனிதநேயம் தேக்கிய உள்ளத்தை பகிர்ந்தளித்தாய் நாநிலம் போற்ற நலிந்தவர் வாழ்ந்திட நலனுறு நாநிலத் திட்டங்கள் தீட்டியே திருத்தமுற மாமனிதம் போற்றி நின்ற உன்வாழ்வு வழிமுறை மாபெரும் மனிதவரலாறு பிரிந்தனை ஏனோ? நல்லதிபராய் நல்மாணாக் கர்கள் உருவாக்கி நல்லொழுக்கம் உனைப் பார்த்து வழிநடக்க நல்லதோர் முன்மாதிரி நலனுறக் காட்டிய கோவே நல்லதோர் உலகைக் கண்டிட விளைந்த தலைவனே மனிதம் போற்றி மாவுலகம் வாழ்ந்தி உழைப்பை மனிதருக்காய் தந்தபொது நலவாதி உன்போல் மாந்தரை காணமுடிய வில்லை அன்பனே மாய்ந்தனை என்ற செய்தியால் நிலைதடுமாறினேன் வாய்ந்த மனையாள் பிள்ளைகள் சகோதரர் தவிக்க மாய்ந்திட விதிதான் வந்ததோ ஐயனே என்செய்வோம் வாயினில் செம்மொழி வாய்த்திட உரைத்திடும் நாவும் வானில் பறந்திட காலமும் வந்ததோ அன்பரே? அன்பின் நண்பன் த.சிவபாலு குடும்பம் கனடா முன்னை கொத்தணி அதிபர் மல்லாவி
Rip.