யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் விநாயகபுரத்தை வசிப்பிடமாகவும், அனிஞ்சியன் குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தனிநாயகம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் ஒளிதீபம் அணைந்ததென்று ஏற்கமுடியவில்லை
ஆனாலும் நாட்கள் 31 ஆகியும் உங்களைத் தேடி
தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொடர்புகொண்டு எமக்கு ஆறுதல் ஊறி அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் பதாதைகள், கண்ணீர் அஞ்சலிகள், மலர்மாலைகள் என்பவற்றால் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் இறுதி நிகழ்வின் போது அஞ்சலி உரை நிகழ்த்திய உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தலைவனின் இழப்பின் போது எம்மை ஆறுதல் படுத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் அத்துடன் எம்மை இன்று வரை ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Rip.