

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் விநாயகபுரத்தை வசிப்பிடமாகவும், அனிஞ்சியன் குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தனிநாயகம் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கற்பகம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி(ஆசிரியை துணுக்காய் அ.த.க.பா), காலஞ்சென்ற கலைச்செல்வன், அருட்செல்வி(விநாயகபுரம்), தமிழ்ச்செல்வி(ஆசிரியை தேறாங்கண்டல் அ.த.க.பா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியசீலன்(ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி), தயாகரன், புவிநாயகன்(அதிபர்- பொன்னகர் தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, மருதலிங்கம் மற்றும் தருமரத்தினம்(விநாயகபுரம்), மயில்வாகனம்(முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர்- வவுனியா), வரதராசா(யோகபுரம் மத்தி), அமிர்தலிங்கம்(துணுக்காய்ப் பிரதேச சபைத் தவிசாளர்- மல்லாவி), பேரம்பலம்(கந்தபுரம்), புண்ணியமூர்த்தி(விநாயகபுரம்), ஜெயலட்சுமி(அனிஞ்சியன்குளம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபாலசிங்கம்(நெடுந்தீவு), குணசிங்கம்(நெடுந்தீவு), தருமரத்தினம்(பிரான்ஸ்), கோவிந்தபிள்ளை(நெடுந்தீவு), குணவதி(நெடுந்தீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், ஜோஜிதா, ஆரண்யன், சுடரோன், கலைச்சுடர், கதிரவன், கனிவிழி, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரபி, அஸ்விகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் விநாயகபுரம் பாலியாறு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 170
அனிஞ்சியன் குளம்,
முல்லைத்தீவு.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rip.