Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 29 MAR 1945
ஆண்டவன் அடியில் 01 JUN 2017
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா (மல்லிகா)
வயது 72
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா 1945 - 2017 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.   

எம்மை ஈன்றெடுத்து
 இன்பமுடன் வளர்த்த தாயே!
ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் நினைவுகள்
 எம் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கின்றதே!

அன்பை விதைத்து
 அறத்தைப் புகட்டி
வாழ்க்கைப் பாதை காட்டிய
 உங்கள் வார்த்தைகள் இன்றும் ஒலிக்கின்றதே!

காலங்கள் மாறினாலும்
காட்சிகள் பல வந்தாலும்
உங்கள் அன்பிற்கு ஈடாக
எதுவும் இவ்வுலகில் இல்லை தாயே!

கண்களுக்கு எட்டாத தூரத்தில்
நீங்கள் இருந்தாலும்
 எம் இதயத்தின் ஒவ்வோர் துடிப்பிலும்
நீங்கள் என்றும் வாழ்கின்றீர்!

அருகிலிருந்து ஆறுதல் தர
 நீங்கள் இன்று இல்லை இங்கு
எங்களுக்குத் தேறுதலாய்
 இறைவனோடு சேர்ந்து
தெய்வமாய் துணையிருக்க
 தினம் தினம் வேண்டுகின்றோம்.

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
 கணவன்,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!!!

தகவல்: அலோசியஸ் எட்வின் (மகன்), Luzern-Switzerland.