Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 29 MAR 1945
ஆண்டவன் அடியில் 01 JUN 2017
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா (மல்லிகா)
வயது 72
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா 1945 - 2017 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஆறு அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவுகள் எம் அடிமனதில்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா!

அன்பாலும் பண்பாலும் எமை கவர்ந்த
பண்பு நிறைந்த தாயே பாசத்தின் ஊற்றே
துன்பத்தை உங்களுக்குள் புதைத்து இன்பத்தை
எமக்குள் விதைத்த தாயே உங்கள் நினைவால் துடிக்கின்றோம்!
தவிக்கின்றோம் இன்றுவரை நாமம்மா

எல்லா நினைவுகளும் நீங்களாகி
உங்கள் உயிர் உள்ளவரை வாழ்ந்தோம்
இப்போ ஆறாத ரணங்களுடன்
ஆயிரம் இரவுகள் அழுதாலும்
பிரிவின் துயர் குறையவில்லை
உங்கள் அன்பு முகம் மறக்கமுடியவில்லை!

ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும் நிகர் உண்டோ
அம்மா மீண்டும் நீங்கள் உதித்து
உங்கள் அழகு முகம் தோன்றாதோ
என விழித்துக் கொண்டு இருகின்றோம் அம்மா

அன்பின் கதகதப்பும் வலிக்காத தண்டனையும்
இனி யார் தருவார் எங்களுக்கு.

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...!!!

தகவல்: அலோசியஸ் எட்வின்(மகன்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute