Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 29 MAR 1945
ஆண்டவன் அடியில் 01 JUN 2017
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா (மல்லிகா)
வயது 72
அமரர் அலோஷியஸ் மேரிபிறக்சீடா 1945 - 2017 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லவோ நிற்கின்றோம்!

நிலாவை சூரியனை ஒளிர்கின்ற
 தாரகைகளை பார்க்கையிலே
 அங்கே உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகின்றது!

ஆண்டுகள் பல சென்றாலும் - எங்கள்
மனதில் உங்கள் நினைவுகள் பசுமையாக
துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்!

எங்கள் தாயே உங்கள் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கின்றோம்!

ஆண்டுகள் ஏழு கடந்தாலும்
உங்கள் நினைவு மறையவில்லை
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
நீங்கள் எங்களுக்கு தாயாக வரவேண்டும் அம்மா!

அமைதிபெற்ற உங்கள் ஆன்மா
 இறைவன் இல்லத்தில்
 இளைப்பாற வேண்டுகின்றோம்!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...!!! 

தகவல்: அலோசியஸ் எட்வின்(மகன்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute