கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசாந் ஜெகதீஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-02-2025
எங்கள் உயிருக்கும் உயிரான செல்வ மகனே..
என் உலகம் நீதான் என்றிருந்தேன்
அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் தந்து விட்டு
அரை
வயதில் எங்கு தான் சென்றாயோ..???
உன்னைப் பிரிந்து் எங்கள் உள்ளம் வாடுதே
பிரிவின் தூரம் அறிந்தும்
மனம் உன்னை துரத்தி துரத்தி தேடுதே...
நீ வாழ்ந்த
வீடு நீ நடந்து சென்ற தெரு,
கடந்து சென்ற இடம்
எல்லாமே அப்படியே இருக்க
நீ
மட்டும் எங்கு போனாய்...??!!
வாழ்க்கை என்ற வசந்த காலத்தை விட்டு
உன்னை வாரி
அணைத்துக் கொண்டானோ
அந்த இறைவன்...???
வலி தாங்க முடியாமல்
நாங்கள் வாழ்நாள்
முழுவதும் தவிக்கிறோம்...!!!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு நீ மட்டுமே
பிள்ளையாய் பிறந்திடுவாய்
என்றும் ஏங்கி நிற்கும் தாய்...!!!
என்றும் உன்
நினைவுடன் அப்பா, அம்மா, தம்பிமார்.