Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 AUG 1992
இறப்பு 16 JAN 2022
அமரர் யோசாந் ஜெகதீஸ்வரன்
வயது 29
அமரர் யோசாந் ஜெகதீஸ்வரன் 1992 - 2022 North York, Canada Canada
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசாந் ஜெகதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 04-02-2023

கறைபடியா தூய வாழ்வில்
சிட்டாக சிறகடித்து
இன்பமுடன் வாழ்ந்த என்
அன்பு மகனே யோசாந்.

அன்று அந்த தருணம்
என்ன நினைத்தாயோ........
யாரை நினைத்தாயோ....
யாரை அழைத்தாயோ...

தாங்க முடியவில்லையடா
உன் பிரிவு..
உயிரை உருக்கும் அந்த காட்சியை
நினைக்க மனம் மறுக்கிறது.

கனவுகளை சுமந்து சென்றாயே..
வீடு திரும்பி வராமல் எங்கே போனாய்.
திரும்பி வா...

நாம் கட்டிய அன்பு கூட்டை
நீ பிரித்து போட்டாய் என் செல்வமே...
உன் முகம் பாராமல் உன் குரல்
கேளாமல் என் உள்ளம் உறையுதடா...

உன் மென்விரல்கள் தொட்ட
பொருட்கள்.. நீ இன்றி மௌனித்து போனதடா.
உன் அழகு ஆடையெல்லாம்
மடிப்போடு மடிந்து போனதடா.

உன் உண்மைக் காதலியும்
உன்னுடனேயே போய்விட்டார்.
உங்கள் கடைசி நொடி காட்சிகள்
இன்றும் எமை கண்கலங்க வைக்கிறது

எல்லா வலிகளையும் வார்த்தைகளால்
சொல்ல முடியவில்லை.

நீ பிரிந்தது எங்களுடைய
கண்களை விட்டுதான்
அன்றி எங்களுடைய இதயத்தை
விட்டு அல்ல.

எங்கள் இதயமதில் உன் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக்கொண்டே
இருக்கும்...

நீ என் சுவாசமாய் என்றென்றும் என்
உதிரத்தில் வாழ்ந்து கொண்டே இருப்பாய்
என் செல்வமே...
நிலையில்லா இவ்வாழ்வில்
வாழ்ந்து முடித்த உன்னிடத்தில் நான்
வந்து சேரும் வரை ஆராதிப்போம்
உன் ஆத்மா சாந்திக்காக.

ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. 

You lived a pure and untainted life,
My Dear Son Yosanth,

 That day, that final moment...
What have you thought?
Whom have you thought of?
Whom have you called?

Oh My dear Son, we can't bear your leaving...
That day you left us, a part of us died too...

You were carrying your dream and living toward it…
Where did you go without coming back home? Please come back...

The beautiful family nest, we have built together…
You decided to leave the nest without telling us...

Our heart aches without seeing your face and hearing your voice...
All the things you have touched around the house, they are all silent now…

Your true love has also gone with you..
That last minute, we can’t even imagine what you both must have gone through…
Words can’t explain all the pain...

You have only left our eyes, My Dear Son, but not our hearts and thoughts.

Your love will continue to shine in our hearts till the end...
The special memories of you will always bring a smile...

You will live forever in our hearts, in our soul, My Dear Yosanth...

Life is uncertain - that you have shown to us...
May you rest in peace until we meet again.

Om Shanti... Om Shanti... Om Shanti...!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

அகாலமரணம் Tue, 25 Jan, 2022