-
09 AUG 1992 - 16 JAN 2022 (29 வயது)
-
பிறந்த இடம் : North York, Canada
-
வாழ்ந்த இடம் : North York, Canada
திதி : 24-01-2024
கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசாந் ஜெகதீஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அழியவில்லை எம் சோகம்.
என் பாசமுள்ள அன்பு மகனே யோசாந்.
எங்கள் அன்பில் வந்த முதல் செல்வம் நீ.
இன்று எங்களை தவிக்க விட்டு நீண்ட தூரம் சென்று விட்டாய்.
எங்கள் மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றோம் மகனே.
உன் மணக்கோலம் காண துடித்தோம்.
நீயோ பூக்கோலம் கொண்டு மறைந்த மாயம் என்னவோ.
நேற்று வரை எம்மோடு நீ வாழ்ந்த நிறைவு நேற்றுடனே போய் விட்டது.
உன் நினைவொன்றே எம் வாழ்வாயிற்று.
உன் நினைவுகள் தரும் கண்ணீர் இவ்வுலகில்
நாம் வாழும் வரை வற்ற போவதில்லை என் செல்வமே.
உன் தோற்றம் மறைந்தாலும் உன் தூய முகம் தொலைந்தாலும்
தொலைவில் நீ துயில் கொண்டாலும்.
உன் தொடர்பை எம்மால் துண்டிக்க முடியாமல் தவிக்கிறோம்.
எங்கள் தூயவனே.
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
North York, Canada பிறந்த இடம்
-
North York, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion