யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rosehill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேந்திரன் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(பேருவலை), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீத்தாலக்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்திரன்(லண்டன்), றமணேந்திரன்(லண்டன்), றஜிந்திரன்(Birmingham), சாய்ராந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
பாணு, யாழினி, மதுமிதா, கோபிதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, மகேந்திரா, விமலாதேவி, கமலாதேவி, சறோஜினிதேவி, விஜயேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி(லண்டன்), ஜெயதேவன்(பிரான்ஸ்), ஜெயலட்சுமி(லண்டன்), அன்னலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரன், யசோதரை(லண்டன்), மீனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றியா, றியான், றொகன், அஸ்வின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
The loss is immeasurable, but so is the love left behind. You will always be remembered mama .