யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராணி ரவீந்திரன், பவளராணி இராசரத்தினம் ஆகியோரின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் யோகராணி ரவீந்திரன் (மறைவு: 28-12-2021)
திதி: 12-01-2026
அமரர் பவளராணி இராசரத்தினம் (மறைவு: 04-01-2022)
அக்கா, தங்கை என்ற அந்த பந்தம் - இன்று
ஆறாத வடுவாய் எங்களை வாட்டுகிறது!
நான்கு வருடங்கள் கடந்தும்...
மாறவில்லை உங்கள் மீதான எங்கள் பாசம்!
பாசத்தின் இலக்கணமாய் வாழ்ந்த தேவதைகளே,
பிரிவின் துயரத்தை யாரிடம் சொல்வோம்?
ஒரே கூட்டில் வளர்ந்த பறவைகளாய் - இன்று
விண்ணகம் சென்றது ஏனோ?
இல்லத்தின் ஒளியாய் இருந்த உங்கள் முகம்,
கண்மூடினாலும் எம் நினைவுகளில் நிழலாடும்!
உதிரத்தால் இணைந்த அந்த உறவின் வலிமை,
உயிர் உள்ளவரை எம் நெஞ்சில் நிலைத்திருக்கும்!
ஆயிரம் உறவுகள் உலகினில் இருந்தாலும்,
உங்கள் இடத்தை நிரப்ப எவருமில்லை!
காலங்கள் உருண்டோடி மறைந்தாலும் - உங்கள்
கனிவான பேச்சும் சிரிப்பும் மறையாது!
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்!