1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யதீசா ஸ்ரீதர்
வர்த்தக, முகாமைத்துவபீட 1ஆம் வருட மாணவி- களனிப் பல்கலைக்கழகம், பழைய மாணவி- இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 20
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யதீசா ஸ்ரீதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகளே...!
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள் நிஜம் தானா
என்று நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்!
கான மயிலே கண்மணியே
கானல் நீராய்ப் போயினையோ?
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உன் பிரிவால் வாடித்துடிக்கும்
குடும்பத்தினர்!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences