13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சேவியர் விவிலியா பேபி கெலனா
1962 -
2010
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேவியர் விவிலியா பேபி கெலனா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
தரணியில் பவனி வந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று
பதிமூன்று ஆண்டுகள் ஆனதம்மா...
ஆண்டு பல ஆனபோதும்
உனையிழந்த தவிப்பதனில்
ஏங்கி வாடுகின்றோம்...
நீ
வாழ்ந்து முடிக்கும் முன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும்
எம் நினைவுகளும் வலிகளும் ஆறாதம்மா!
உன் மலர்ந்த முகம் இனி
எப்போது காண்போம்....
ஆசைகளையும் கனவுகளையும்
உன்னுள் அடக்கி
எம்மை
பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும்
நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்!
நாம் மீளாத்துயரோடு
உன்
நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்...
உந்தன் ஆத்மா
சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்