நினைவஞ்சலி
அமரர் சேவியர் விவிலியா பேபி கெலனா
1962 -
2010
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேவியர் விவிலியா பேபி கெலனா அவர்களின் 11ம்
ஆண்டு நினைவஞ்சலி.
நடமாடிய வீட்டில்
படமாகிப் போனவளே!
உம்மை எம் மன வீட்டில்
சுமந்து நிற்கின்றோம்!
உங்களோடு நாம் இருந்த நாட்கள்
எம் வாழ்வின் பொற்காலங்கள்
இன்முகம் காட்டி இன்சொல் பேசி
எம்மை உருவாக்கிய அம்மாவே..!
வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டியாய் உயர்ந்து
எம்மையெல்லாம் ஆளாக்கி
மறைந்தும் மறையாத எம் குல விளக்கே.....!
வருடம் பதினொன்று கழிந்தாலும்
உங்கள் விம்பம் எம் மனதை விட்டு அகலாதம்மா!
எம்மனது என்றென்றும்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்