Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1962
இறப்பு 03 DEC 2013
அமரர் விக்னேஷ்வரி மேரி சிறிபரன்
வயது 51
அமரர் விக்னேஷ்வரி மேரி சிறிபரன் 1962 - 2013 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி, ஜேர்மனி Essen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஷ்வரி மேரி சிறிபரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு என்ற அகல் விளக்கு
என் இதயம் விட்டு பறந்ததேனோ.
பாசம் என்ற உன் ஒளியில்
உன் பாதம் பார்த்து நான் நடந்தேன்.
வாழ்க்கை என்ற பெறுமதியை
உன் வரவால் நான் அறிந்தேன்.
தேடுகிறேன் உன் சத்தத்தை
இல்லை என்று அறிந்தபின் தேற்றிட யாரும் இல்லை.
வருமா இன்னொரு காலம்
உன் கரம் பிடித்து நான் வாழ்ந்திட.
ஆண்டு பத்து கடந்தாலும் வேண்டுகிறேன்
தேவனிடம் என் அருகில் நீ இருக்க வேண்டுகிறேன்.
தனிமையாக விட்டு விட்டு நீ மறைந்தாய் விண்ணுலகம்
மண் உலகில் நான் இருந்து தேடுகிறேன் உன் வரவை.
தனிமையில் காத்திருக்கும் என் கண்களுக்கு
 உன் பதிலை கொண்டு வர யார் வருவார் மண்ணுலகம்.
காத்திருக்கிறேன் உனக்காக.
அன்புடன் உன் கணவன்..

தகவல்: குடும்பத்தினர்

Photos