Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1962
இறப்பு 03 DEC 2013
அமரர் விக்னேஷ்வரி மேரி சிறிபரன்
வயது 51
அமரர் விக்னேஷ்வரி மேரி சிறிபரன் 1962 - 2013 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி, ஜேர்மனி Essen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஷ்வரி மேரி சிறிபரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஏழு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், பேத்தி

தகவல்: குடும்பத்தினர்

Photos