யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி, ஜெர்மனி Essen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஷ்வரி மேரி சிறிபரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பல கடந்தாலும் உன்
அன்பினால் வாழ்கின்றேன்
உறவு பல இருந்தாலும்
உன் உண்மையால் வாழ்கின்றேன்
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
பார்ப்பவர்களுக்கு பைத்தியமாக தெரிகின்றேன்
கேட்பவர்களுக்கு பதில் இன்றி வாழ்கின்றேன்
பாதியிலே நீ சென்றதால் நான்
பார்வை அற்ற மனிதனானேன்
தேடி வந்து அன்பு செய்தாய்
நாடி வந்து ஏற்றுக்கொண்டாய்
நடுவழியில் விட்டு விட்டு ஒரு
கனவுபோல் மறைந்து விட்டாய்
உன் அன்பை நினைக்கையிலே
உணவும் சேறானது
எதை நினைத்து வாழ்ந்திட நான்
வருவாயா தினமும் நீ
எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றேன் உன் நிழலாய்.
உன் அன்பின் கணவர் பிள்ளைகள் பேத்தி.
may your soul rest in peace