1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம்
முன்னாள் கணக்காளர்- வேலணை முத்துமாரி அம்மன் கோவில்
வயது 92
அமரர் விஸ்வலிங்கம் பரமலிங்கம்
1928 -
2021
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் பரமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின்
சிகரமாகவும் வாழ்ந்த
எம்
அன்புத் தெய்வமே
நீங்கள்
வாழ்ந்த இவ்வுலகில்
எமை
வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ
ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்
வரை உங்கள் நினைவிருக்கும்
அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
பரமலிங்கம் அண்ணரின் மறைவு மிகவும் வேதனை தருகின்றது. குடும்பத்தார்களுக்கு அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். கா.சிவஞானம்...