யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மாப்பாணர் வளவை வதிவிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசாலாட்சி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-02-2022
மனம் கலங்குதே
மதியும் மயங்குதே
தாயன்பை மனசு தேடுதே
பிள்ளைப் பாசமும் வாடுதே அம்மா,
எண்ணிரெண்டு பதினாறு வயதில்
மணப் பெண்ணான
மூவிரெண்டு பிள்ளை களின்
பாசத்துக்குத் தாயான அம்மா,
மாப்பாணர் வளவு அம்மாடி
எவ்வளவு அதன் பரப்பளவு
அதுவே
தங்கள் கண்ணாளனின் மனஅளவு,
சாம்ராஜ்யத்தின் மகாராணியானவர்;
இரண்டு தர பத்தொன்பது வயதில்
ஏனிழந்தீர்கள் ஆருயிரை
தங்கள் கணவர் உயிரை
அப்படி ஏங்குதே எங்கள் உசிர்கள்,
எப்படித் தாங்கியதோ, அது மகிமைகள்!
செய்த உதவிகளுக்கு உண்மையாக
உடன் பிறப்புகளுக்கு உதவியாக
வாழ்ந்ததென்ன தாழாது வாழ்ந்ததென்ன!
வெளிநாட்டு வாழ்வென்ன
தங்களால் அதுவும் எங்களுக்கு
உள்நாட்டு வாழ்வேயம்மா!
அன்பை அள்ளிக்கொடுத்து
பாசத்தை அள்ளியெடுத்த
பத்தினி நீங்கள்,
மனத்திலும் குணத்திலும்
எல்லோர்க்கும்
உத்தமியும் நீங்கள்,
அன்பிலும் பாசத்திலும்
எல்லோர்க்கும்
எங்கள் உலகம் நீங்கள்,
அணைப்பிலும் பிணைப்பிலும்
எல்லோர்க்கும்
எங்கள் சக்தியும் நீங்கள்,
ஆண்டுகள் போனாலென்ன
நீங்கள் இனி மீண்டாலென்ன
யார் தடுத்திடுவார் தாயன்பை
நாமழுத கண்ணீர் யாவும்
ஆனந்தக் கண்ணீ ராகிடுமே எம்மம்மை.
பெரியம்மா இவ்வுலகைவிட்டுச் சென்று ஓராண்டு கடந்தாலும், அவரது நினைவு எங்கள் உள்ளங்களில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளது. இவர் புறங்கூறா நல்லுள்ளம் கொண்டவர் என்பதை இந்த நல்லுலகம் நன்கறியும்....