ஜேர்மனி Leverkusen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வினோபா தில்லைவாசன் அவர்களின் நன்றி நவிலல்.
ஆதி அந்தமில்லாக் காலவெள்ளம்
ஓடிக்கொண்டே இருக்கட்டும்
பாதிவழியில் உன்னைக்
கூட்டிச்சென்றானே பாவி யமன்
கண்ணில் அழுகை ஓயவில்லை!
விழிகள் உம்மை தேடுதே!
வந்துவிட மாட்டீரா மீண்டும்
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில்
வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை
மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம்
தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும்,
உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும்
செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“Extending our deepest sympathy to you during this time. Our prayers and blessings are with you.”