ஜேர்மனி Leverkusen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வினோபா தில்லைவாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 04.04.2023
முகம் பூத்த புன்னகையின் முழுவடிவாம்
முழுமதியின் தண்ணொளியாம்
அகம்பூத்த அழகான அறிவுசைகள்
ஆதவனின் செங்கதிராம் ஒளிவீச்சு
இராமன் சரம் பூத்த பாணம் என
பாய்ந்து வரும் உன் பேரன்பு
வாணியவள் வரம் பூத்த சொத்தே
வள்ளியின் நாயகனே வந்திடுவாய் எம்சுகத்தே.
உன் கை பட்டதெல்லாம் பொன்னாகும்
உள்ள பணிதனில் உள்ளத்தை இடம்பிடித்தாய்
அற்ற குளத்தில் அறுநீர் பறவைபோல்
அயராது உழைத்து வெற்றி கண்டவனே
எண்ணிய கருமங்களை எளிதில் முடித்தவனே
புண்ணியம் பார்த்து பொதுப்பணி செய்தவனே
திண்ணியமான உன் திருமுகம்தான் விரைவில்
மறைந்து போகுமோ எங்களுக்கு.
பண்பான பேச்சுடனே பாசமாய் பழகியவனே
பாதியில் மறைந்தாலும் உன்பாசம் மறையாது
துன்பத்தில் எமது துயரம் துடைக்கப் பிறந்தவனே
இன்பத்தில் எமையெல்லாம் நெறிப்படுத்த உதித்தவனே
அன்போடு நாம் அணைத்த அரும்சொத்து மறைந்தது போல்
மின்னாமல் முழங்காமல் எமை விட்டுப்பிரிந்தவனே
புடம் போட்ட பொன்போல் இறைவன் பாதமதில்
நீங்காத் துயில் கொண்ட எம்மாணிக்க மரகதமே.
காலதேவன் கடுகதியில் சென்றாலும் உம் நினைவுகள்
எம் நெஞ்சை விட்டு நீங்காது என்றென்றும்
நிலைத்து நிற்கும் ஐயா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய எந்நாளும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
“Extending our deepest sympathy to you during this time. Our prayers and blessings are with you.”