ஜேர்மனி Leverkusen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வினோபா தில்லைவாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் நெய்யூற்றி அறிவு எனும் சுடரேற்றி
அவனிதனில் நாம் வாழ உயர்கல்வி கற்றவனே
வல்லவன் நீயென நம்பிக்கையானவனே
இமையோடு விழியெனவே இதயத்தில் நிலைத்தவரே
விண்ணில் இருந்து கூட அல்ல- எம்
மண்ணிலிருந்து ஓர் சூரிய அஸ்தமனம்
கண்களில் இருந்து அல்ல எம் தங்க மகனே
இதயத்தில் இருந்து கசிந்துருகும் குருதி ஐயா
பாசத்தின் பல்கலைக்கழகமே - உங்கள்
சுவாசத்தின் முற்றுப்புள்ளியை ஏற்க முடியவில்லையே -எம்
நேசத்தின் நிரந்தர முகவரியே உம்மைக்
காலம் பிரிக்குமென்று கனவிலும் நினைக்கவில்லையே
சிரித்து சிரித்து பேசி எம் இதயச்சிறையில் உறைந்தவனே
உன் செயல்கள் ஒவ்வொன்றும் எம்
கனவிலும் கவிதையாய் உறையும் ஐயா
எத்தனை உறவுகள் எத்தனை உற்றார்கள் -
அத்தனை பேரும் உமைக்காணாது பரிதவித்து நிற்கின்றோம்
நேற்றுப்போல் எல்லாம் நெஞ்சோடு நிலைத்திருக்க
தோற்றுப் போனது போல எம் எதிர்பார்ப்புகள் எல்லாம்
கானல்நீர் போல் கலைந்து போனதே வினோபா
காற்றின் கரங்கள் உமைக் கவர்ந்து சென்றபோது
தேற்றுவதற்கு வார்த்தையின்றி செயலிழந்து நிற்கின்றோம்
ஊரின் வாசத்தோடு உமது கனிவான பேச்சு எங்கே
உத்தமனான எங்கள் வினோபாவின் உள்ளம் உறங்கிவிட்டது இங்கே
துடுப்பிழந்த வள்ளம்போல் கரை காணாது துடிக்கின்றோம்.
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு உம் நினைவுகள் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய எந்நாளும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
“Extending our deepest sympathy to you during this time. Our prayers and blessings are with you.”