ஜேர்மனி Leverkusen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வினோபா தில்லைவாசன் அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்லத்தம்பி, பரமேஸ்வரி(ஜேர்மனி) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான யாழ். கந்தர்மடத்தைச் சேர்ந்த சீவரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தில்லைவாசன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
வாசனா, விஜய், வர்ஷா, விபிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஷநாதன், காந்திமதி(ஜேர்மனி), காலஞ்சென்ற வசந்த கோகிலம் மற்றும் சிவானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் பரமானந்தம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயலக்ஷமி மற்றும்இராஜதுரை, சோமேஸ்வரி(இலங்கை), சதானந்தம், சோமலதா(இலங்கை), சத்தியானந்தன், ராஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவகுமாரன், நாகேஸ்வரி(சுவிஸ்), உதயகுமாரன், ஜெயந்தனி(ஜேர்மனி), காலஞ்சென்ற சதாசிவம் மற்றும் மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அபிரா, அபிஜன், வினோஷியா, விபாஞ்ஜினி, வர்ணிகா, நிக்ஷன், மகிந்தன், மாலினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
திருக்குமார், தர்ஷனி, ரஜனிகாந்த், சர்மிளா, ரஜிதரன், பவித்ரா, சிந்துஜா, கவுதம், றிஷோத்தமன், கிஷோத்மன், பிரவீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
முக்கிய குறிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக ஜேர்மன் சட்டங்களுக்கு அமைய பார்வையிடும் நேரங்களில் ஒத்துழைக்கவும்
“Extending our deepest sympathy to you during this time. Our prayers and blessings are with you.”