யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும் கொண்ட வில்வரெட்ணம் வைத்திலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் சப்திக்கும் புங்குடுதீவிலே
அவதரித்த எங்கள் தெய்வமே - நீங்கள்
அமரத்துவம் அடைந்த செய்திகேட்டு
எம் மனமும் அஸ்தமாகிப் போனதே
உங்கள் திருமுகத்தை தினமும் தேடியலைகிறோம்
தேடிய திசையெல்லாம் உம் நிழற்படங்கள்தான்
கண்ணீரை வரவைக்கின்றது
வாழ்வில் பல அர்த்தங்களைச் சொல்லித்தந்து
அன்பாலே எமையெல்லாம் அரவணத்து - அழகான
பேரப்பிள்ளைகளையும் ஊட்டிவளர்த்து
அன்புக்கைகளும் தீக்கு இரையாகிவிட்டதே
என்றெண்ணி எம்முள்ளமும் குமுறி அழுகின்றது இந்நாளிலே
ஏழைகளுக்கு உதவதென்றால்
முன்னிற்கும் கருணைத்தீபமே - உங்கள்
இறுதிபயணம் தாய்மண்ணிலே திகழவேண்டும் என்று
இறைவனிடம் வேண்டிக்கொண்டது நாமறியாத இரகசியம் ஆயிற்றே
ஒருமுறையேனும், எம்மைப்பார்த்து ஒரு வார்த்தை
பேச வரமாட்டீரோ என ஏங்கித் தவிக்குது எம் மனங்கள்
பிள்ளைச்செல்வங்கள் ஐவரைப்பெற்று
ஆன்மீக - நற்குணங்களை எமக்கு ஊட்டி வளர்த்த
இனிய தந்தையே எம்மை விட்டுச் செல்ல
எப்படி ஐயா மனம் வந்தது? - எம் கவலைகளை
சொல்லி அழுதால் கல்லும் கரைந்துவிடும்
உள்ளமும் கலைந்து விடும் அப்பா
ஆண்டாண்டு சென்றாலும் ஆறாது எம் சோகம்
மாறாது உம் திருமுகம்
ஈரவிழிகளுடன் இறைவனிடம் வழியனுப்பி
உம் ஆத்மா சாந்திபெற உங்கள் திதியில் எல்லாம் வல்ல திருவருளை
கண்ணீரோடு வேண்டி நிற்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We missed you ❤️ Tilaxshan Alaxshan