யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும் கொண்ட வில்வரெட்ணம் வைத்திலிங்கம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா(சுவிஸ்), கோமளா(சுவிஸ்), முரளி(கனடா), கோசலா, கேமலதா(சொப்னா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அன்னலட்சுமி அவர்களின் அருமைச் சகோதரரும்,
சிவகுமார், சிவபாலன், ஜெயதீபா, சதுர்டீன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிவசோதி(கனடா), திருஞானம்(பிரான்ஸ்), அருணகிரி(யாழ்ப்பாணம்), நகுலநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாதசுந்தரம், செல்வராணி, செல்வராணி, மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கார்த்திகன், சமந்தா, சாதுசன், தனுஷன், சினேகன், திலக்ஷன், அலக்ஷன், கோபிதன், தசாயினி, பாத்திமா, தமா, சப்ரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We missed you ❤️ Tilaxshan Alaxshan