யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகௌரி லக்ஷ்மணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஆறு கடந்தாலும் உம்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது
எதிர்பார்க்கவில்லை உம் பிரிவை
வாழ்கின்றோம் உம் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உம் பிரிவால்
வாழ்கின்றோம் உம் நிழலாய்
தேடி வந்து அன்பு செய்தாய்
நாடி வந்து ஏற்றுக்கொண்டாய்
நடுவழியில் விட்டு விட்டு ஒரு
கனவுபோல் மறைந்து விட்டாய்
விழி போல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று!
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
விண்ணுலகில் சொப்பனமாய் ஏன் சென்றாய் இன்று..?
நீர் மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
பாசம் என்ற பந்தத்தை அள்ளிதந்து
பாதியில் ஏன் நிறுத்தி சென்றாயம்மா
நீயில்லாமல் நாம் படும் அவலநிலை
யார் அறிவார்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைனைப் பிரார்த்திக்கின்றோம்..
Gowri five years have passed and still miss you everywhere all the time.