1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
24
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகௌரி லக்ஷ்மணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..
அழுதழுது தேடுதம்மா
எம் விழிகள் உங்களைக் காண்பதற்கு
ஒருமுறை வருவீர்களோ!
உங்கள் திருமுகம் காண்பதற்கு
அழுத விழிகளுக்கு ஆறுதல் தருவீர்களோ!
நீண்ட பெருவெளியில்
நிற்கதியாய் நிற்பதுபோல்
மீண்டும் ஒரு பிறப்பாய்
காண்பதற்கு ஏங்குகிறோம்
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Gowri five years have passed and still miss you everywhere all the time.