5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
22
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகௌரி லக்ஷ்மணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...
எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்...
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Thinking of you always.